Webdunia - Bharat's app for daily news and videos

Install App

144 தடையை மீறி ரத யாத்திரையை எதிர்த்த சீமான் கைது!

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (12:35 IST)
வி.எச்.பி.யின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு திரட்ட விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ரத யாத்திரை உத்தரபிரதேசத்தில் தொடங்கி மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களை கடந்து தமிழகத்திற்கு வருகிறது. 
 
தமிழகத்திற்குள் இந்த ரத யாத்திரை நுழைய அதிமுகவினரை தவிர மற்ற எல்லா கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு கட்சியினர் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் போராட்டம் நடத்தினர்.
 
ரத யாத்திரை தடுப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் 144 தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீமான் உள்பட்ட போரட்டம் நடத்திய அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
 
தீந்தமிழ்நாட்டில் தீய சக்திகளுக்கு என்ன வேலை என்றும் தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் சீமான் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments