Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்தது நிவர்: மீண்டும் துவங்குகிறது பொது போக்குவரத்து!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (11:09 IST)
நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நிறுததப்பட்ட பேருந்து சேவை மதியம் 12 மணி முதல் மீண்டும் துவக்கம்.
 
கடந்த 2 நாட்களாக தமிழகம் மற்றும் புதுவை மக்களை பயமுறுத்தி கொண்டிருந்த நிவர் புயல் இன்று அதிகாலை 2 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்க 4 முதல் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.    
 
தற்போது இந்த புயல் ஆந்திரப்பிரதேசம் நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தமிழகத்தில் நிவர் புயல் கரையை கடந்தபோதிலும், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், நிவர் புயல் தாக்கம் குறைந்தாலும் தரைப்பகுதியில் தாக்கம் நீடிக்கும் என அறிவித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். காற்றும் 65 கிமீ - 75 கிமீ வேகத்திலும், சில நேரங்களில் 85 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என தகவல் வெளியானது. 
 
இதனிடையே நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக சென்னையில் நேற்று மாலை நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை இன்று மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் மீண்டும் பேருந்து சேவை தொடங்கும் எனவும் அறிவிப்பு. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை எப்படி இருக்கும்? ரமணன் பேட்டி!

நயவஞ்சக சக்திகளுக்கு இரையாகிவிடக் கூடாது. திருமாவளவன் கடிதம்.

போருக்கு சென்ற இடத்தில் ஆபாச படம் பார்க்கும் கொரிய ராணுவம்? - காரணம் கிம் ஜாங் அன்?

ஆண் டெய்லர்கள், ஆண் ஜிம் ட்ரெய்னர்களுக்கு தடை?? - அதிரடி உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments