Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வை விலக்க முடியாது என்று தெரிந்தே பொய் வாக்குறுதி கொடுத்தது திமுக: தமிழிசை செளந்திரராஜன்..!

Webdunia
செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (07:51 IST)
நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாது என்று தெரிந்தே திமுக பொய்யான வாக்குறுதியை கொடுத்தது என்றும்  நீட் தேர்வை வைத்து தயவு செய்து மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே நான் ஆதரித்து வருகிறேன் என்றும்  புதுச்சேரியில் சாதாரண மாணவர்கள் கூட என்னிடம் வந்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன் என்று சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று தெரிவித்தார். 
 
ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வை வைத்து அரசியல் நடக்கிறது என்றும் நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் விலக்குவோம் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்தார்கள் என்றும் நீட் தேர்வை நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாது என்று தெரிந்தே அவர்கள் அந்த வாக்குறுதியை கொடுத்தார்கள் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
  
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் மாணவர்களை படிக்க விடாமல் ஏமாற்ற வேண்டாம் என்றும் மாணவர்களை படிக்க விடுங்கள், எப்போதும் போல் நீட் தேர்வில் எதிர்மறை கருத்துக்களை மட்டும் பரப்பாதீர்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் 47வது அதிபராகும் வாய்ப்பு உள்ளது: டிரம்ப்

இன்று பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

லெபனான் பேஜர் தாக்குதலுக்கு உத்தரவிட்டது நான்தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்!

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments