தமிழகத்தைப் போலவே புதுவையிலும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரவிருக்கும் நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் திடீர் திடீரென பதவியை ராஜினாமா செய்தனர்
ஏற்கனவே நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் இன்று ஒருவர் ராஜினாமா செய்ததால் மொத்தம் ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். அதுமட்டுமன்றி காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக எம்எல்ஏ ஒருவரும் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு தற்போது 12 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விடும் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலை முதல்வர் நாராயணசாமி கவர்னரை சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமாவை அவர் அளிப்பார் என்று கூறப்படுகிறது
புதுவை முதல்வர் ராஜினாமா செய்தால் காபந்து அரசு இருக்குமா அல்லது இடைப்பட்ட இரண்டு மாதத்திற்கு கவர்னர் ஆட்சி இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்