Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்தமாக ஆட்சியை கலைக்கும் நாராயணசாமி! – புதுச்சேரியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (11:30 IST)
புதுச்சேரியில் ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கு மோதல் தொடர்ந்து வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் ஆளுனர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆளும் காங்கிரஸின் எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். 30 உறுப்பினர்கள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் எண்ணிக்கை 14 ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கந்தசாமி “மத்திய அரசும், ஆளுனர் கிரண்பேடியும் புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து தொல்லை அளித்து வருகின்றனர். அவர்கள் வற்புறுத்தலால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுவதால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்து ஆட்சியை கலைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments