Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை கொடுமை செய்த மாமியார்; மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய மருமகள்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (08:42 IST)
புதுக்கோட்டையில் வரதட்சணை கொடுமை செய்த மாமியாரை மருமகளே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணியம் பள்ளத்தை சேர்ந்தவர் ராஜாம்பாள். இவரது மகன் ரமேஷுக்கு பிரதீபா என்ற பெண்ணை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இவர்களுக்கு 9 மாத குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அடிக்கடி ராஜாம்பாளுக்கும், பிரதீபாவிற்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று 100 நாள் வேலைக்கு சென்று வந்த ராஜாம்பாள் வீட்டில் உறங்கி கொண்டிருந்தபோது அவர்மீது மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்தியுள்ளார் மருமகள் பிரதீபா. முக்கால்வாசி உடல் முழுவதும் எரிந்த நிலையில் ராஜாம்பாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதை தொடர்ந்து பிரதீபா கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் மாமியார் ராஜாம்பாள் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், கணவருடன் வாழ இடையூறு செய்ததாலும் அவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments