அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது. கட்சியே என்னுடையது என புகழேந்தி பேட்டி அளித்துள்ளார்.
அமமுக கட்சியை சேர்ந்த புகழேந்தி, அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, புகழேந்தி விவகாரம் குறித்து தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்நிலையில், இன்று அமமுக சார்பில் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் புகழேந்தியின் பெயர் இடம்பெறவில்லை. செய்தி தொடர்பாளர்கள் பட்டியலில் புகழேந்தியின் பெயர் இடம்பெறாதது, வீடியொ விவகாரத்தின் எதிரொலி என கட்சிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறதாம்.
இது குறித்து புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் பாஜகவுக்கு செல்வதாக கூறுவது தவறு. இதுவரை நான் எந்த கட்சிக்கும் செல்லவில்லை. அமமுக செய்தி தொடர்பாளர் பட்டியலில் இருந்து நான் நீக்கப்பட்டதாக எனக்கு தகவல் வரவில்லை.
அமமுகவில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது; கட்சியே என்னுடையது. அமமுகவை ஆரம்பித்ததில் நானும் ஒருவன், யாரையும் நம்பி நான் இல்லை என தெரிவித்துள்ளார்.