Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிகண்டனை மட்டும் கட்சியில் இருந்து நீக்காதது ஏன்? புகழேந்தி காட்டம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (08:04 IST)
அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மட்டும் ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என புகழேந்தி கூறியுள்ளார்.

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தேடி வந்த நிலையில் நேற்று காலை பெங்களூரில் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சென்னைக்கு அழைத்து வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளீர் காவல் துறையினர் விசாரணை செய்ததாக தெரிகிறது. பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி ’பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனை ஏன் கட்சியில் இருந்து இன்னும் நீக்கவில்லை. இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால் ஒரு நொடியில் அவரை தூக்கி இருப்பார். நடிகை சாந்தினியோடு மேலும் பல அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியையும் அழைத்து விசாரிக்கத்தான் வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு துணையாக நிற்கும்: முதல்வர் ஸ்டாலின்

இனி பயங்கரவாதிகளால் தப்ப முடியாது! - இந்தியா தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆதரவு!

பங்குச்சந்தை இன்று 2வது நாளாக சரிவு.. ஆனாலும் ஒரு ஆறுதல்..!

போர் பதட்டம் இருந்தும் தங்கம் விலை இன்று சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

அடுத்த கட்டுரையில்