Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு அரசிற்கு நன்றி கூறிய பஞ்சாப் விவசாயிகள்

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (20:02 IST)
தமிழகத்திற்கான ஆண்டு பட்ஜெட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பஞ்சாப் மாநில விவசாயிகள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான  திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் ஆகஸ்டு 13 அன்று முதல் பட்ஜெட் தாக்கல்  செய்தது. 

இந்நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து பேசியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “திமுக ஆரம்பம் முதற்கொண்டே விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆலோசனைகளை ஏற்று அன்றே தமிழக விவசாயிகளுக்கு பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் முதல்வர் கருணாநிதி. அதனாலேயே வேளாண் துறை பெயர் மாற்றப்பட்டு வேளாண் மற்றும் உழவர்கள் நலத்துறை என அமைக்கப்பட்டது. 13ம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார்.

விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தக்கல் செய்யப்படும் என ஆளும்கட்சி கூறியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் பாராட்டு தெரிவித்தன.

இந்நிலையில் இன்று பஞ்சாப் மாநில விவசாயிகள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள்  கூறியுள்ளதாவது:

இயற்கை விவசாயத்தைப் பேணிப் பாதுக்காக்கின்ற வகையில், வேளாண் துறைக்கு என தனிப் பட்ஜெட் ஒதுக்கியுள்ளது தமிழ்நாட்டு அரசு.  இதற்கான தமிழக அரசிற்கும், அம்மாநில முதல்வர் முக.ஸ்டாலினுக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகள் சார்பில் நன்ரி தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்திற்கு எதிரான பஞ்சாப்,  ஹரியானா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட விவசாயிகள் போராட்டம் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் வழுக்கி விழுந்து உயிரிழப்பு? - அதிர்ச்சியில் வாசகர்கள்!

டிரம்ப் அமைச்சரவை.. எலான் மஸ்க்கிற்கு பதவி.. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு பதவி மறுப்பு..!

ஆபாச படங்களை பார்த்து மருமகளிடம் தவறாக நடந்து கொண்ட மாமனார்.. அதிர்ச்சி சம்பவம்..!

கரப்பான்பூச்சி மாதிரி ஊர்ந்து போன உங்க பெயரை வைக்கலாமா? - எடப்பாடியாரை தாக்கிய மு.க.ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments