Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி தலைமையில் இணையும் சிறு கட்சிகள்??! – அரசியல் எண்ட்ரிக்கு அஸ்திவாரமா?

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (13:45 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் தொடங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை புதிய நீதி கட்சி தலைவர் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்கி போட்டியிடுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் இன்னமும் கட்சி குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கினால் அவருக்கு ஆதரவளிக்க தமிழகத்தில் உள்ள தொடக்கநிலை கட்சிகள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் இன்று ரஜினியை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசியுள்ளார். இது எதுபற்றிய பேச்சுவார்த்தை என்பது தெளிவுப்பட தெரியவில்லை என்றாலும், ரஜினியின் அரசியல் நகர்வு குறித்ததாக இருக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments