Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல்..எந்த தொகுதியில் தெரியுமா?

sinoj
செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (15:17 IST)
கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில்  மீண்டும் போட்டியிட உள்ள நிலையில்  நாளை மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில்,   மக்களவை தேர்தலில் போட்டியிட நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் ராகுல் காந்தி.
 
அதன்படி கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில்  மீண்டும் போட்டியிட உள்ள நிலையில்  நாளை மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி.
வேட்புமனு தாக்கல் செய்யும்போது அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருப்பார் என தகவல் வெளியாகிறது.
 
இத்தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். ஏப்ரல் 26 ஆம் தேதி 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வய நாடும்  ஒன்று. மேலும்  கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆனால் முதல் கையெழுத்து பெண்களை தாலியை அறுக்காத அளவுக்கு நான் பார்த்துக்கொள்வேன் என சொன்னார்கள் அது என்ன ஆச்சு- அதிமுக அமைப்பு செயலாளர் சுதா.கே.பரமசிவன் கேள்வி!

திமுகவினர் நடத்திய பொதுக்குழு உறுப்பினர் கூட்டத்தில் பிரியாணிக்காக அடி உதை!

மாமன்னன் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி கொடுப்பார் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments