நேற்று முன்னாள் அதிமுக எம்எல்ஏ மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், இன்று அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன். இவரது வீட்டில், இன்று காலை திடீரென 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், எம்எல்ஏ ராமச்சந்திரன் மகன்களான விஜயகுமார், சந்தோஷ் குமார் ஆகியோர்களது வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக சேவூர் ராமச்சந்திரன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்னாள் அதிமுக எம்எல்ஏ, இன்று நடப்பு அதிமுக எம்எல்ஏ என, அடுத்தடுத்து அதிமுக பிரமுகர்களின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.