Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (07:10 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 காற்றின் வேகத் திசை மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடலூர், நாகை, திருவாரூர், நெல்லை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், கன்னியாகுமரி  ஆகிய ஏழு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே டிசம்பர் 31ஆம் தேதி வரை சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments