Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
திங்கள், 6 மே 2024 (16:58 IST)
தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் தமிழகத்தில் உள்ள சுமார் 20 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால் சாலைகளில் போக்குவரத்து குறைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் அலர்ட் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments