Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 15 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (08:20 IST)
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக லேசான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இந்த மழை பெய்து வருவதாகவும் அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதை எடுத்து தமிழ்நாடு கேரளா பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.  

மேலும் நாளை முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

நவீன ரோபோ சுற்றுலா வழிகாட்டி.. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி மற்றும் ஐஐடி மெட்ராஸ் முயற்சி..

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments