மழை காரணமாக சில மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டானா புயல் கரையை கடந்துவிட்டாலும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மிதமான மழை இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என கலெக்டர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 26.10.2024 அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 26.10.2024 அன்று சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.