Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள்..!

Siva
செவ்வாய், 30 ஜூலை 2024 (18:11 IST)
நாளைய தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கன மழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நாளை அதாவது ஜூலை 31ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளை  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments