Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவை முக ஸ்டாலினால் 100 நாட்களில் மீட்க முடியுமா? அதிமுக எம்.எல்.ஏ கேள்வி

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (16:16 IST)
கச்சத்தீவை முக ஸ்டாலினால் 100 நாட்களில் மீட்க முடியுமா?
தன்னிடம் மனு கொடுத்தால் 100 நாட்களில் அந்த குறையை தீர்ப்பேன் என்று தேர்தல் பிரச்சார மேடைகளில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறிவரும் நிலையில் கச்சத்தீவை மீட்டு தருமாறு மனு கொடுத்தால் 100 நாட்களில் அவரால் மீட்க முடியுமா என அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
மதுரையில் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய சாலைகளை திறந்து வைத்த ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசியபோது ’மதுரையில் சாலைகள் போடவில்லை என திமுக எம்பி கனிமொழி குற்றஞ்சாட்டினார். எந்த இடத்தில் சாலைகள் போடப்படவில்லை என்பதை அவர் குறிப்பிட்டுக் கூறவில்லை 
 
மக்களின் குறையை தீர்க்க ஸ்டாலின் 100 நாட்கள் கேட்கிறார். ஆனால் அதிமுக ஆட்சியில் ஒரே நாளில் மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது. கட்சத்தீவை மீட்டு தரவேண்டும் என ஸ்டாலினிடம் மனு கொடுத்தால் 100 நாட்களில் மீட்டு தர முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ராஜன் செல்லப்பாவின் இந்த கேள்விக்கு முக ஸ்டாலின் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments