Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் இருந்து விடுதலை ஆனார் ராஜேந்திர பாலாஜி!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (09:37 IST)
ராஜேந்திர பாலாஜி இன்று காலை திருச்சி மத்திய சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார்.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை பணமோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவான நிலையில் தனிப்படை அமைத்து தேடிய போலீஸார் கர்நாடகாவில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர்.

இதனிடையே முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக ராஜேந்திரபாலாஜி தரப்பில் தொடரப்பட்ட முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில் தற்போது அவருக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை 7.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலையில் இருந்து விடுதலை ஆகியுள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

இன்று ஒரே நாளில் 920 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. சென்னை நிலவரம்..!

மெட்ரோ பணிகள் முடிந்தது.. சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..!

2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. போர் பதற்றம் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments