Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை வறுத்தெடுக்கும் ரஜினி ரசிகர்கள்!- ட்ரெண்டிங்கில் #வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (10:11 IST)
லதா ரஜினிகாந்த் பள்ளி வாடகை விவகாரம் குறித்து திமுகவினர் சிலர் கிண்டல் செய்ததை தொடர்ந்து ரஜினி தொண்டர்களும் களத்தில் இறங்கியுள்ளதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா நடத்தி வரும் பள்ளி வாடகை விவகாரத்தில் ஏப்ரலுக்குள் பள்ளி கட்டிடத்தை காலி செய்து கொடுக்க நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

இந்த விவகாரத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்த திமுகவினர் சிலர் ரஜினி சிஸ்டத்தை சரி செய்வேன் என சொல்கிறார். ஆனால் வரி கட்டவோ, வாடகை கட்டவோ மாட்டேன்கிறார் என கிண்டல் செய்துள்ளனர். இதனால் தங்கள் பங்குக்கு களம் இறங்கிய ரஜினி ரசிகர்கள், தொண்டர்கள், வாடகை பாக்கியில்லை என லதா ரஜினிகாந்த் அளித்த விளக்கத்தை மேற்கோள் காட்டி #வாடகைஇங்கே_மூலபத்திரம்எங்கே என்ற ஹேஷ்டேகை வேகமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் திமுக – ரஜினி தொண்டர்கள் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments