Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி குரல் கொடுக்க வேண்டும் – பாஜக தலைவர்

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (22:15 IST)
சமீபத்தில்,கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான விமர்சனம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் கடவுள் இல்லை என்று கூறிய கட்சிகளின் தலைவர்களை கூட பேச வைத்தது என்பதும் கருப்பர் கூட்டத்திற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பதற வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளான செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை தி நகரில் உள்ள கருப்பர் கூட்டம் யூ-டியூப் அலுவலகத்தில் சோதனை செய்த சைபர் கிரைம் போலீசார் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினார்கள். மேலும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் மேலும் பல வீடியோக்கள் இருப்பதாகவும் இதனால் அந்த சேனலை தடைசெய்ய வேண்டுமென யூடியூப் நிர்வாகத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இதனை அடுத்து தற்போது கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் இருந்து 500 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்து கடவுள்களை இழிவு செய்யும் வகையில் கருப்பர் கூட்டம் பதிவேற்றிய 500 வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அண்ணன் ரஜினிகாந்த் பெரிய ஆன்மிகவாதீ அவர் கந்த சஷ்டி விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர்கள் நடராஜ், பிரசன்னா போன்றோர் இந்த விவகாரத்தில் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments