Publish Date: Wed, 24 Jun 2026 (11:44 IST)
Updated Date: Wed, 24 Jun 2026 (11:47 IST)
ஜெயிலர் பட விழாவில் எப்போது ரஜினி அந்த காக்கா கழுதை கதையை சொன்னாரோ அப்போது முதலே விஜய் ரசிகர்களுக்கு ரஜினியை பிடிக்காமல் போய்விட்டது. ரஜினி காக்கா என விஜயைத்தான் சொல்கிறார் என நம்பிய விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரஜினியை கடுமையாக விமர்சிக்க துவங்கினார்கள்.
மேலும், ரஜினியின் புதிய படங்கள் வெளியாகும் போதெல்லாம் அந்த படம் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்கள். ரஜினியின் வேட்டையின் படம் கூட பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்காமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்..
ஒருபக்கம் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற போது திரையுலகில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்து சொன்னார்கள். ஆனால் ரஜினிகாந்த் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேபோல், தமிழக முதல்வர் விஜய் கடந்த 22ம் தேதி தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் திரையிலகிலிருந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பொதுவாக தமிழக முதல்வர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் ரஜினிகாந்த் விஜய்க்கு தனது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில்தான் இன்று அவரின் தர்மன் பட விழா நடைபெற்றது. இந்த விழா முடிந்து சென்றபோது செய்தியாளர்கள் அவரிடம் முதல்வர் விஜய்க்கு நீங்கள் ஏன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை? என்று கேட்டதற்கு பேசிட்டேன் என்று சொல்லிவிட்டு ரஜினி சென்றுவிட்டார்., ஒருவேளை அவர் தொலைபேசி மூலம் விஜய்க்கு வாழ்த்து சொன்னாரா என்பது தெரியவில்லை.