Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை-ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட இஸ்லாமியர்கள்...

J.Durai
வியாழன், 11 ஏப்ரல் 2024 (14:31 IST)
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடபடுகிறது.
 
ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை  நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும்,நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் 
இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
 
ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு  இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடுகின்றனர். 
 
இந்நிலையில் இந்த ஆண்டு  ஈகைத் திருநாள் எனப்படும்  ரமலான் பண்டிகையினை  முன்னிட்டு கோவை உக்கடம் ஜமாத் அகலயே ஹதீஸ் பள்ளி வாசல் சார்பில்  பள்ளி நிர்வாகி தயூப்கான்,இமாம் ஷதகத்துலா உமரி,தலைமையில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
 
இதில் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் 11 பேர் சுட்டுக்கொலை.. மீண்டும் பதட்டம்..!

நேற்று முன் தினம் 23 பேர், இன்று 12 பேர் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம்..!

சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

சென்னையில் இடி மின்னலுடன் வெளுக்க போகுது மழை.. வானிலை எச்சரிக்கை

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments