Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' படத்தை போல் இந்த ரத யாத்திரையையும் விளம்பரப்படுத்திட்டாங்களே!

Webdunia
செவ்வாய், 20 மார்ச் 2018 (12:08 IST)
விஸ்வ இந்து பரிசத் அமைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் தொடங்கிய ரத யாத்திரை மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா உள்பட பல மாநிலங்களை கடந்து இன்று தமிழக எல்லைக்குள் வந்துள்ளது.

நேற்று வரை இப்படி ஒரு ரத யாத்திரை நடப்பதே பலருக்கு தெரியாது. சுமாரான மெர்சல் படத்தை எச்.ராஜாவும் தமிழிசையும் விளம்பரப்படுத்தி சூப்பர் ஹிட் ஆக்கியது போல், அமைதியாக விளம்பரமின்றி அதைவிட முக்கியமாக பெரும்பாலானோர்களால் கண்டுகொள்ளாமல் நடந்த இந்த ரத யாத்திரையை தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் தற்போது தேசிய அளவில் விளம்பரப்படுத்திவிட்டார்கள்.

மதச்சார்பின்மை கொள்கையை உடைய காங்கிரஸ் ஆளும் கர்நாடகம், கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளாவில் இந்த ரதம்  வந்தபோது அம்மாநில அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இங்குள்ள அரசியல்வாதிகள் கூவுவது போன்று  அந்த மாநிலங்களில் எந்தவித வன்முறையும் மதத்தின் பெயரால் நடக்கவில்லை. லெட்டர் பேட் கட்சிகள் தங்கள் கட்சியை விளம்பரப்படுத்துவதற்காக எடுத்து கொண்ட விஷயம் தான் இந்த ரதயாத்திரை எதிர்ப்பு. இந்த விஷயத்தில் திமுகவும் தலையிட்டு கெட்ட பெயர் வாங்கி கொள்வதுதான் வேதனையான விஷயம். இந்த ரதயாத்திரையை கண்டுகொள்ளாமல் விட்டிருக்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தீவரவாதி என்று ஒட்டப்பட்ட நோட்டீஸ் - காவல் ஆணையாளரிடம் புகார்!

தமிழகத்தில் மீண்டும் கோடை காலமா? நேற்று 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு..!

பழனி பஞ்சாமிர்தத்தில் மாட்டுக் கொழுப்பு? தவறான தகவல் பரப்பிய பாஜக நிர்வாகி மீது புகார்!

அடுத்த 2 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments