Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கமல் கட்சி கொள்கையே காப்பிதானே? ரவிக்குமார் எம்பி கேள்வி!

கமல் கட்சி கொள்கையே காப்பிதானே? ரவிக்குமார் எம்பி கேள்வி!
, புதன், 16 டிசம்பர் 2020 (11:02 IST)
நடிகர் மற்றும் அரசியலவாதி கமலஹாசன் தனது கட்சியின் கொள்கைகளை சொன்னால் மற்றவர்கள் காப்பி அடித்து விடுவார்கள் என கூறியதற்கு விமர்சனங்க்ள் எழுந்துள்ளன.

ரஜினியின் அரசியல் வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளைக் கடந்துவிட்டார். தனது கட்சியின் கொள்கைகள் குறித்து அவர் இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால் மய்யவாதம் என்று மேலோட்டமாக சொல்லி செல்கிறார். இந்நிலையில் கமல்ஹாசனிடன் கட்சியின் கொள்கை குறித்து கேட்டபோது ‘கொள்கைகளை சொன்னால் மற்ற கட்சியினர் காப்பி அடித்து விடுவார்கள்’ எனக் கூறினார்.

அவரின் இந்த பதிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம் பி ரவிக்குமார் தனது முகநூலில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில் ‘ கமல்ஹாசனின் ‘காப்பி ரைட்’கட்சி கொள்கையை வெளியே சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனக் குறிபிடப்பட்டிருப்பவற்றின் அப்பட்டமான காப்பி.

The Centrist Party இன் இணைய தளத்திலிருந்து வரிக்கு வரி கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். Salient points about centrism from the CP perspective என்ற தலைப்பின்கீழ் தரப்பட்டிருக்கும் 3 பாய்ண்ட்டுகளையும் அப்படியே காப்பி எடுத்து centrism என்ற தலைப்பின்கீழ் தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது கமல் கட்சி. இப்படி காப்பி அடிப்பதற்கு தனக்கு மட்டுமே ‘ரைட்’ இருக்கிறது. அதுதான் ‘காப்பிரைட்’ என கமல் நினைத்துக்கொண்டிருக்கிறாரா? ’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
webdunia

மற்றொரு பிரிவினரோ கமல் தமிழ் சினிமாவை உலக சினிமாவின் தரத்துக்கு உயர்த்துகிறேன் என சொல்லி ஹாலிவுட் படங்களை எல்லாம் காப்பி அடித்து தமிழில் எடுத்தார். அதுபோல வெளிநாட்டு கட்சிகளின் கொள்ககளை எல்லாம் காப்பி அடித்து அரசியல் செய்யப் பார்க்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி, அமித்ஷா மீது இழப்பீடு வழக்கு! – ரத்து செய்த அமெரிக்கா!