Publish Date: Wed, 29 Jul 2026 (10:54 IST)
Updated Date: Wed, 29 Jul 2026 (10:56 IST)
கடந்த சில நாட்களாகவே விஜயை பின்பற்றி நடிகர் தனுஷும் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற செய்தி சமூகவலைத்தளங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் தனது பிறந்த நாள் விழாவில் ரசிகர்கள் முன்பு பேசிய தனுஷ் நாம் இதோடு நின்று விடக்கூடாது.. உங்கள் வீட்டு அருகில் வசிக்கும் மக்களுக்கு என்ன பிரச்சனை என்றாலும் உதவி செய்யுங்கள்.. நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள்.. நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்று பேசினார்.
ஒருபக்கம் விஜயின் அப்பா எஸ்..ஏ.சிக்கு எப்படி தனது மகனை அரசியலுக்கு கொண்டுவரும் என்கிற ஆசை வந்ததோ அதுபோலவே தனுஷின் அப்பா கஸ்தூரிராஜாவுக்கும் தனது மகனை அரசியல் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஒரு சினிமா விழாவில் பேசிய விஜயின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் திமுக, அதிமுக காலியாகும், தனுஷின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கிறது.. உதவி செய்வதற்கு அனுபவமும், அறிவும் தேவையில்லை.. மனம் இருந்தால் போதும்.. அரசியலில் ரிஸ்க் எடுக்க தனுஷ் தயாராக இருந்தால் 2031 ஆம் வருடம் விஜய் vs தனுஷ் என்று அரசியல் களம் மாறும் எனக் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க