Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே. சுரேஷ்க்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் நிறுத்திவைப்பு.. நீதிமன்றம் உத்தரவு..!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (10:50 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த நோட்டீஸ் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இது குறித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.  

ஆர்கே சுரேஷ் தற்போது தனது மனைவியுடன் துபாயில் இருப்பதால் அவர் மீண்டும் இந்தியாவிற்கு வர திட்டமிட்டுள்ளார். டிசம்பர் 10ஆம் தேதி துபாயில் இருந்து அவர் சென்னை வர உள்ளதால் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என அவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டிசம்பர் 12ஆம் தேதி போலீசார் முன் ஆர் கே சுரேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஒருவேளை அவரை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் உயர்நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும்  தெரிவித்தார்.\

மேலும் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 18ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments