Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து சாலைமறியல்-கரூர் அருகே பரபரப்பு.

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (23:47 IST)
காவிரி ஆற்றின் அருகே உள்ள நெரூர் வட பாகம் பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து சாலைமறியல் நெரூர் வடபாகம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அவரது கணவர் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குறைகளை சொன்னால் மிரட்டுவதாகவும் கேவலமாக  பேசுவதாகவும் என்ற குற்றச்சாட்டு - கரூர் அருகே பரபரப்பு.
 
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் வடபாகம் பஞ்சாயத்து காவிரி ஆற்றினை ஒட்டிய பஞ்சாயத்து ஆகும், இந்நிலையில் கடந்த 15 தினங்களாக, குடிநீர் விநியோகம் இல்லை என்றும், மேலும் இரண்டு மாதங்களாக இதே தண்ணீர் பிரச்சினை நீடித்து வருவதாகவும் பொதுமக்கள் அவ்வப்போது குற்றச்சாட்டு வைத்தவர் இந்த நிலையில், இன்று அந்த பாதிக்கப்பட்ட பஞ்சாயத்து மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், நெரூர் வடபாகம் பஞ்சாயத்து தலைவராக திமுகவைச் சார்ந்த செந்தாமரைச் செல்வி பதவி வகித்து வரும் நிலையில் அவரும் அவருடைய கணவர் ராஜேந்திரன் அப்பகுதி பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொன்னால் மிரட்டுவதாகவும்., கேவலமாக பேசுவதாகவும்., பொதுமக்கள் குற்றச்சாட்டு மேலும் பஞ்சாயத்தில் இருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் திறந்துவிடும் பணிக்கு முறையான ஆட்களை நியமித்து குடிநீர் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீஸார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பெயரில் பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் கரூர் டு திருமுக்கூடலூர், திருமுக்கூடலூர் டு கரூர் ஆகிய போக்குவரத்து சேவைகள் சுமார் அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது
 
 
பேட்டி : மேனகா -  அப்பகுதி பொதுமக்கள்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்களின் கோரிக்கைகள்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை..!

டாக்டர்களுக்கும், நோயாளிகளுக்கும் சரியான புரிதல் இருக்க வேண்டும்: தமிழிசை

மருத்துவர்கள் தாக்கப்படும்போது நடவடிக்கை எடுக்காததால் இன்னொரு சம்பவம்: அண்ணாமலை

புல்டோசர் வழக்கு: சொத்துகளை இடிக்கவழிக்காட்டு நெறிமுறைகள்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.. மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் குறித்து ஈபிஎஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments