தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கடந்த பட்ஜெட்டின் போது ரயில்வே துறைக்கு மொத்தம் ரூ.1.4 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், தெற்கு ரயில்வேக்காக மட்டும் ரூ. 7,114 கோடி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக அமையவுள்ள 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை, திண்டிவனம் - நகரி, அத்திப்பட்டு -புத்தூர் 88.30, ஈரோடு - பழனி, சென்னையிலிருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர், மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி, மொரப்பூர் - தருமபுரி என மொத்தம் 10 புதிய வழிதடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.