Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

செஸ் ஒலிம்பியாட் - ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டம்!

செஸ் ஒலிம்பியாட் - ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டம்!
, புதன், 27 ஜூலை 2022 (14:43 IST)
போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தின் அட்டைகள் வழங்கப்படும்.


உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ஜூலை 28 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக தமிழ்நாடே கோலாகலமாக தயாராகி வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் தனி பாடல் வெளியிட்ட நிலையில், சென்னையில் உள்ள நேப்பியர் பாலம் செஸ் பலகை போல அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாளை செஸ் ஒலிம்பியாட் தொடங்க உள்ள நிலையில் சென்னை முழுவதும் பல பகுதிகளில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மாமல்லபுரத்தை சுற்றியுள்ள 13 மருத்துவமனையில் ரூ. 2 லட்சம் வரை அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான திட்டத்தை வரவேற்கிறேன்: பாமக ராமதாஸ்