Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை பார்த்து அஞ்சி நடுங்கும் தமிழக அரசு!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (17:36 IST)
தமிழக அரசு திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்து அஞ்சி வருகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி.

 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, கொரோனா காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்யாத தமிழக அரசு, திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்து அஞ்சி வருகிறது. 
 
திமுக தலைவர் கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய கிராம சபைக் கூட்டத்திற்கும் அதைத் தொடர்ந்து அதற்கு மக்கள் அளித்துவரும் அமோக ஆதரவையும் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதற்கு தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில், கூட்டம் தொடர்ந்து நடைபெறும். 
 
சட்ட விதிகளுக்கு உட்பட்டே மக்களை சந்திக்கும் கூட்டங்களை திமுக நடத்தி வருவதாகவும் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் திமுக சந்திக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments