Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோமதிக்கு ரூ. 10 லட்சம் பரிசு தொகை அளித்தார் மு.க. ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (14:47 IST)
கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.
23 ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் கோமதி இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.
 
கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 70 வினாடிகளில் கடந்து அவரது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கோமதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன்னர்  திமுக தலைவர் ஸ்டாலின், தங்கமகள் கோமதி,மற்றும் ஆரோக்கியராஜீவுக்கு பரிசு தொகை அறிவித்திருந்தார்.
 
இதுபற்றி ஸ்டாலின் கூறியதாதாவது:
 
 ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்றும், 400 மீ, ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கியராஜீவுக்கு திமுக சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
 
மேலும் இந்தியாவுக்கான இருவரது சாதனைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கோமதி மாரிமுத்துக்கு ரூ. 10 லட்சத்தை பரிசளித்தார்.அப்போது கோமதியின் அம்மாவும் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு இயல்பை விட 90% மழை அதிகம் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம்..!

பாகிஸ்தானுக்கு முன் எச்சரிக்கை கொடுத்தது தவறு அல்ல, அது ஒரு குற்றம்!” ராகுல் காந்தி

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments