பகுதி நேர ஆசிரியர்களுக்கு இதுவரை 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் அதிகரித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நிரந்தர ஆசிரியர்கள் கிட்டத்தட்ட லட்சத்தை நெருங்கிய அளவில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பகுதிநேர பகுதி நேர ஆசிரியராக பணிபுரிபவர்கள் மிகவும் குறைவான சம்பளத்தை வாங்கி வருகின்றனர்
அவர்கள் தற்போது வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி வரும் நிலையில் தற்போது ரூ. 2500 ரூபாய் அவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதி நிலைமை சரியான உடன் மேலும் சில வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.