Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனுமதியின்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்: டிமிக்கி கொடுத்து லாரியுடன் தப்பி ஒடிய டிரைவர்

அனுமதியின்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்: டிமிக்கி கொடுத்து லாரியுடன் தப்பி ஒடிய டிரைவர்
, வெள்ளி, 27 ஜூலை 2018 (19:13 IST)
உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றவந்த லாரி ! பொதுமக்கள் சிறைப்பிடித்து மணல் சேமிப்பு கிடங்கில் நிறுத்தி வைத்திருந்த லாரியை அத்துமீறி எடுத்துசென்ற லாரி ஓட்டுநரால் பரபரப்பு ஏற்பட்டது.



கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அமைந்துள்ள தண்ணீர்பள்ளியில் உரிய ஆவணங்கள் இன்றி மணல் ஏற்றவந்த டி.என்.75 டி 3201 நாகர்கோவில் வண்டியை பொதுப்பணித்துறை உதவி பொறியாளரால் லாரி சிறைபிடிக்கப்பட்டு தண்ணீர்பள்ளியில் உள்ள பயன்பாட்டில் இல்லாத முந்தைய மணல் சேமிப்பு கிடங்கில் நிறுத்திவைக்கப்பட்டு கடந்த 24 ம் தேதி குளித்தலை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.


நேற்று இரவு 12.20 மணிக்கு அந்த மணல் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த செக்கூரிட்டி பிச்சைமுத்து மற்றும் மணி ஆகியோரிடம் சிறைபிடிக்கபட்ட லாரி ஓட்டுநர் பிரதீப் குடிபோதையில் வந்து மிரட்டி கீழே தள்ளிவிட்டு லாரியை எடுத்துசென்றுவிட்டார் என செக்யூரிட்டி பிச்சைமுத்து  குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஒடும் நிலையில் ஆங்காங்கே திருட்டு தனமாக மணல் அள்ளும் சம்பவம் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றது.

சி.ஆனந்தகுமார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளையும் நம்ப வேண்டாம்: மு.க.ஸ்டாலின்