அமமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதுஇதுகுறித்து சசிகலா தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் உற்ற தோழியுமான சசிகலா அவருடன் போயஸ் கார்டன் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வசித்துவந்தார். அதனால் அவருக்கு வாக்கு அங்கேயே அளிக்கப்பட்டு இருந்தது.ஆனால் அவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின் அந்த வீடு அரசுடைமையாக்கப்பட்டதால் சசிகலா உள்ளிட்ட 19 பேரின் பெயர் அந்த பகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
சிறை தண்டனை பெற்று அவர் வெளியே வந்தும் தேர்தல் ஆணையத்தில் பேர் சேர்க்க சொல்லி விண்ணப்பித்தும் அவர் பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில்,வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாதது பற்றி தேர்தல் ஆணையத்தில் இன்று சசிகலா முறையீடு செய்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் சசிகலா வாக்களிக்க தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரது வழக்கறிஞர். ராஜா செந்தூரப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சசிகலா கடந்த மாதம் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.