Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா நினைவிடம் செல்ல தடை; எம்ஜிஆருக்கு மரியாதை செய்யும் சசிக்கலா!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (15:14 IST)
சென்னை வரும் சசிக்கலா, ஜெயலலிதா நினைவிடம் செல்ல தடை இருப்பதால் அவர் எம்ஜிஆருக்கு மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா கடந்த 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா காரணமாக சிகிச்சை பெற்ற அவர் சில நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் தனிமைப்படுத்தல் முடிந்ததால் பெங்களூரிலிருந்து நாளை சென்னை வருகிறார் சசிக்கலா.

இதனால் சென்னை முழுவதும் பல பகுதிகளில் அவரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சசிக்கலா வருகையையொட்டி சென்னையின் பிரதான பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா நினைவிடம், வேதா இல்லம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சென்னை வரும் சசிக்கலா ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments