Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டர்களின் ஆசைகள் நிறைவேறும்! – பொதுச்செயலாளர் சசிக்கலா அறிக்கை?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (11:42 IST)
அதிமுகவில் சசிக்கலா மீண்டும் இணைக்கப்படுவாரா என்ற பரபரப்பு எழுந்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிக்கலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருமளவில் வெல்லாத நிலையில் சசிக்கலாவை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுகவில் உள்ளவர்களே தொடர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக பிரபலங்கள் சிலர் தொடர்ச்சியாக சென்று சசிக்கலாவை சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அதிமுக, அமமுக கட்சிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினருக்கு எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரிலேயே சசிக்கலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “கழக தொண்டர்களான உங்கள் ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அனைவரும் சேர்ந்து நமது இயக்கத்தை காத்திட வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்புகிறீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கை வீண் போகாத வகையில் எனது வாழ்வை அரசியலுக்கு அர்ப்பணித்துள்ளேன். கழக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புரட்சி தலைவர், புரட்சி தலைவி காட்டிய வழியில் கழகத்தை காப்போம். கவலை வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments