தற்போது ஓய்வில் இருக்கும் சசிகலா மிக விரைவில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.
சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சசிகலாவின் விடுதலைக்குப் பின்னர் அமமுகவும் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஓய்வில் இருக்கும் சசிகலா மிக விரைவில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுர வேகம் எடுக்கும் என நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், துரோகிகள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். கழகம் வலிமையோடும் பொலிவோடும் இருக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கெண்டோர் சத்திய அரசியலில்தான் ஈடுபடுவார்கள் சந்தர்ப்பவாத அரசியலில் அல்ல.
சூதும் - சூழ்ச்சியும் கவ்வியுள்ள அரசியலில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள். சுயலாபத்திற்காக, இயக்கம் சிதறுண்டு போவதை சசிகலா ஒருகாலும் ஏற்க மாட்டார். எதிரிகளின் நெஞ்சம் பதறும்படி விசுவரூபம் எடுப்பார். கழகம் புத்தெழுச்சி பெறும், தேர்தல் களம் புகுவோம், எழுச்சியோடு களப்பணி ஆற்றுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.