கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதை அடுத்து அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நீதிபதிகள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பதிவு செய்தது குறித்து சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கில் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சவுக்கு சங்கரை சிறையில் பார்வையாளர்கள் சந்திக்க சிறை நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்
தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது