Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்ட நாளில் பள்ளிகள் திறக்கும்.. எந்த மாற்றமும் இல்லை! - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!

Prasanth Karthick
வெள்ளி, 16 மே 2025 (10:08 IST)

தமிழக பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் திட்டமிட்ட நாளில் பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.

 

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், பிற வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.

 

ஆனால் ஜூன் மாதம் பாதி வரையிலுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டதால் பள்ளி திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வந்தது. அப்போதைய சூழலை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் வெயில் காலம் நடந்து வரும் சூழலிலும் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்து வருகிறது. அதனால் ஜூன் மாதத்தில் வெப்பநிலை அதிகமிருக்காது என கணிக்கப்படுகிறது.

 

இன்று 10 மற்றும் 11ம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி, அதில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments