Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாலிக்கு தங்கம் ஒரு திட்டமா?. உனக்கெதுக்கு கல்யாணம்?!.. செத்துப்போ!.. சீமான் ஆவேசம்!..

Advertiesment
seeman
தேர்தல் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகள் பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள்.. அவைகளை நிறைவேற்ற முடியுமோ இல்லையோ ஆனால் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.2026 சட்டமன்ற தேர்தல் அறிவித்தவுடன் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பல வாக்குறுதிகளை கொடுத்தது. நாங்கள் வெற்றி பெற்றால் 8 ஆயிரம் மதிப்புள்ள டோக்கன் கொடுக்கப்படும் என திமுகவும், நாங்கள் வெற்றிபெற்றால் எல்லோரின் வங்கி கணக்கிலும் 10 ஆயிரம் பணம் போடுவோம் என அதிமுகவும் சொல்லியிருக்கிறது. ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் பாதி நிறைவேற்றப்படவில்லை என எதிர்கட்சிகள் கூறி வருகிறது.

ஆனால் இந்த முறையும் திமுக பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. ஒருபக்கம் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருக்கும் விஜயும் பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். சமீபத்தில், சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில் தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக அவர் வெளியிட்டார்.

அதில் ஏழை பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு பட்டுப் புடவை கொடுக்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியும் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாலிக்கு தங்கம் என்பதை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்..

‘எதுவும் இலவசம் கிடையாது.. தாலிக்கு தங்கம் கண்டிப்பாக தரமாட்டேன்... காலம் முழுவதும் உன்னுடன் வாழவரும் ஒரு  பெண்ணுக்கு ஒரு பவுனில் தாலி கூட வாங்கி கட்ட முடியாது என்றால் உனக்கு கல்யாணம் தேவையில்லை.. அதுக்கு நீ செத்துப் போகலாம்’ என அதிரடியாக பேசியிருக்கிறார்..

திராவிட கட்சிகளின் இலவச அறிவிப்புகளை பல வருடங்களாக கடுமையாக எதிர்த்து வருகிறார் சீமான்.. மக்களுக்கு எந்த இலவசமும் கொடுக்க தேவையில்லை.. அவர்கல் என்ன பிச்சைக்காரர்களா?.. கையேந்தி இலவசங்களை வாங்க முடியாத அளவுக்கு மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதுதான் ஒரு நல்ல அரசு’ என தொடர்ந்து சீமான் பேசி வருவது குறிப்பிடத்தக்கது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் வேண்டுமானால் முதல்வர் ஆகலாம்; நிஜ அரசியலில் முடியுமா? - விஜயை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!