Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரமுத்து போட்ட பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி - சீமான் காட்டம்

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (16:59 IST)
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவிற்கு ஆதவாக நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என நம் தமிழர் சீமான் தெரிவித்துள்ளார்.

 
ஆண்டாள் குறித்து தனது கவிஞர் வைரமுத்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தொடர் கண்டனங்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. 
 
குறிப்பாக வைரமுத்துவுக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். வைரமுத்துவை தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார் எச்.ராஜா. இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் பாரதிராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், எச்.ராஜாவை சரமாரியாக விமர்சித்து இருந்தார். பஞ்சப் பராரியாக பரதேசம் தப்பி வந்தவன் நீ எனவும், எச்.ராஜாவால் இந்தியா துண்டாடப் படுமோ என்றும் அச்சம் தெரிவித்தார்.
 
இந்நிலையில், இன்று ஒரு படவிழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதிராஜா “வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்தில் கொல்லைப்புறமாக வர நினைத்தால் நிறைவேறாது. எங்களை குற்றம்பரம்பரை ஆக்கி விடாதீர்கள். எங்களுக்கு மதம் என்பது ஒருபோதும் கிடையாது” என பகீரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
அதே படவிழாவில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது “வைரமுத்து ரஜினிகாந்தை நண்பராக பார்க்கிறார். ரஜினி அவரை எப்படி பார்க்கிறார் என்பது தற்போது நமக்கு தெரிகிறது. ஆண்டாள் பிரச்சனையில் இதுவரை ரஜினிகாந்த் வாய் திறந்து பேசவில்லை. 
 
ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா. உப்பிட்ட தமிழ் மண்னை நான் மறக்க மாட்டேன் என  வைரமுத்து எழுதிய வரிகளின் மூலமாகவே ரஜினி வளர்ந்தார். அது வைரமுத்து அவருக்கு போட்ட பிச்சை.
 
வைரமுத்துவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குகளை இழக்க நேரிடும் என ரஜினி பயப்படுகிறார். அப்படி இருக்கக் கூடாது. தர்மத்தின் பக்கம் நிற்க வேண்டும்.” என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments