Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 21 May 2025
webdunia

சீமான் ஆஜராவார் என்பதால் குவிக்கப்பட்ட போலீஸ்.. ஆனால் நடந்தது என்ன?

Advertiesment
சீமான்
, செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (11:09 IST)
நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது.
 
ஆனால் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காலை 10.30 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகஉத்தரவிடப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை!
 
அவருக்கு பதிலாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
 
 ஏற்கனவே சீமான் கடந்த ஒன்பதாம் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் அவர் 12ஆம் தேதி ஆஜராவதாக காவல் நிலையத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் இன்றும் அவர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசுக்கேத்த தோசை.. நிறைவான தரத்தில் குறைவான விலையில் Nokia G42 5G!