Publish Date: Thu, 24 Sep 2026 (11:28 IST)
Updated Date: Thu, 24 Sep 2026 (11:33 IST)
சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் சீமானும் ஒருவர். 15 வருடங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு எதிராக தமிழ் தேசியத்தை கையில் எடுத்தார் சீமான் . இதையடுத்து மாற்றத்தை விரும்பியவர்கள் சீமானுக்கு வாக்களித்தனர்..
கடந்த பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்றது. அதாவது 30 லட்சம் பேர் அந்த கட்சிக்கு வாக்களித்தனர். எப்படியும் சட்டமன்றத் தேர்தலில் தன்னோடு சேர்த்து 5 எம்.எல்.ஏக்களாவது சட்டசபைக்குள்ளே போவோம் என்ற நம்பிக்கையில் சீமான் இருந்தார். ஆனால் ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. அதோடு காரைக்குடியில் போட்டியிட்ட சீமானும் தோல்வியடைந்தார்..
ஒருபக்கம் மேடைகளில் சீமான் நிறைய கதைகளை சொல்லி வருகிறார். ஆனால் அவை கட்டுக்கதைகள் என பலரும் ட்ரோல் செய்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு ஒரு மேடையில் பேசியபோது ‘நான் கராத்தே கிளாஸ் போயிருக்கிறேன்.. நான் சின்ன பையனாக இருப்பேன்.. பெரிய பெரிய ஆட்களை என்னோடு மோத விடுவார்கள்.. ஆனால், அவர்களிடம் சிக்காமல் தப்பிப்பேன்.. ஒரு கட்டத்தில் அவர்கள் டயர்டு ஆனவுடன் ‘ஒரே அடி’ என்று சீமான் சொல்லியிருந்தார். இதை ட்ரோல் செய்து நிறைய மீம்ஸ் வீடியோக்களும் வெளியானது. ஆனால் சீமானுக்கு கராத்தே சொல்லிக்கொடுத்த குரு மனோகர் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் இதுபற்றி பேசியிருக்கிறார்.
சீமான் என்கிட்ட கராத்தே கத்துக்க வந்தப்ப 17, 18 வயசுதான் இருக்கும்.. கேட்டுக்கு முன்னாடி பத்து நாள் கையை கட்டிக்கொண்டு நின்னுக்கிட்டு இருந்தான். அப்பறம் நான் ‘யாருப்பா நீ’ன்னு கேட்டேன்.. கராத்தே கத்துக்க வந்தேன்னு சொன்னான். 1987 லிருந்து 2004 வரைக்கும் சீமான் என்கிட்டதான் கராத்தேவும், சிலம்பமும் கத்துக்கிட்டார். அவர் ‘என்னை விட பெரிய ஆள்கிட்ட எல்லாம் மோத விடுவாங்கன்னு சொன்னதெல்லாம் உண்மைதான்.. சீமான் சின்ன பையனா இருந்தாலும் அசரமாட்டார்.. அவருக்கு புத்தி அதிகம்.. அதை சண்டையில் பயன்படுத்தி அடிப்பார்’ என அவர் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க