Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா அளவுக்காச்சு விஜய் பேசட்டும்.. சீமான் ஆவேசம்!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (12:18 IST)
விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களிலேயே எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் பரபரப்பை அதிகமாக ஏற்படுத்தி வருகிறது. ஒருபக்கம் அதிமுக, திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகள் தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்கு வியூகம் வகுத்து நிற்க, மறுபுறம் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனும், புதிய கட்சி தொடங்கும் ரஜினிகாந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் “அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமலை அடிக்கிற அடியில் விஜய் கூட அரசியல் கட்சி தொடங்க பயப்பட வேண்டும்” என பேசினார். 
 
சீமானின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேவையில்லாமல் விஜய் பற்றி பேசியதால் கொந்தளித்துப்போன விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக போஸ்டர்கள் அடித்தும் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் சீமான், விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது? குறைந்தது சூர்யா அளவுக்காவது விஜய் குரல் கொடுக்கட்டும். மக்களுக்காக போராடி தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும் என சீமான் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

நிலநடுக்கம் ஏற்படும் என கூறிய டிக்டாக் ஜோதிடர் கைது..

செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துவிட்டாரா? மசோதாவை தாக்கல் செய்த வேறொரு அமைச்சர்..!

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு: இந்தியா கொடுத்த பதிலடி..!

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments