மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

Siva
ஞாயிறு, 3 ஆகஸ்ட் 2025 (15:58 IST)
தேனி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், போலீசாரின் தடையை மீறி ஆடு மாடுகளை மேய்த்து ஒரு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
 
சீமான் தனது உரையில், "இலங்கையில் எங்களை குண்டு போட்டு கொன்றார்கள், அது இனப்படுகொலை. ஆனால், இங்கு குடிக்க வைத்து கொல்கிறார்கள், இதுவும் ஒரு இனப்படுகொலைதான்," என்று குற்றம் சாட்டினார்.
 
மேலும், "நாட்டை என்னிடம் ஒப்படைத்தால், ஐந்து ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவேன். அதற்கான திட்டங்களும், சிந்தனைகளும் என்னிடம் உள்ளன," என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஆடு மாடுகளை மேய்ப்பது தொழில் மட்டுமல்ல, அது எங்கள் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மற்றும் பண்பாடு என்று கூறிய சீமான், "மாட்டுப்பொங்கல் கொண்டாடிய பரம்பரை நாங்கள். மாடுகளுக்கு போராடத் தெரியவில்லை. அவை கொம்புகள் இருப்பதை மறந்து,  வண்டியை இழுத்துக்கொண்டிருக்கின்றன என்று ஆவேசமாகப் பேசினார். அவரது இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments