மனுஸ்மிருதி தடை விவகாரத்தில் திருமா வளவனுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி அவ்வாறு கூறியதாக பரப்பி வருகிறார்கள் என திருமாவளவன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் திருமாவளவன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் திருமாவளவனுக்கு ஆதரவுகள் பெருகிக் கொண்டு வருகின்றன.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘ மனுஸ்மிருதியில் என்ன இருக்கிறது என்பதைதான் அண்ணன் திருமா வளவன் சொல்லியிருக்கிறார். நீங்க போராட வேண்டுமென்றால் மனுவுக்கு எதிராகதான் போராட வேண்டும். வேண்டுமென்றால் நீங்கள் வாருங்கள் மனுதர்மத்தை வைத்துக் கொண்டு வார்த்தைக்கு வார்த்தை விவாதம் பண்ணுவோம். உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் நெய் எரிக்கப்படுகிறது. பால் ஊற்றப்படுகிறது. மாட்டு மூத்திரம் குடிக்கப்படுகிறது. மாட்டு மூத்திரம் குடிக்கும் உன்னைவிட மாட்டுக்கறி திண்ணும் நான் இழிமகனா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.