இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்திய ராணுவ வீரர்கள் குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே சமீபத்தில் போர் பதற்றம் உருவான நிலையில் பாகிஸ்தானை எதிர்த்து போரிடும் இந்திய வீரர்களை போற்றும் விதமாக சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.
அதை விமர்சித்து அண்மையில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ “ராணுவ வீரர்கள் என்ன எல்லையிலேயா சென்று சண்டை போட்டார்கள். போருக்கு தேவையான அதிநவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களை வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். எனவே திமுக பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும்” என பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சுக்கு பெரும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். செல்லூர் ராஜூவின் இந்த பேச்சை கண்டித்து இன்று கரூரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பலரும் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
Edit by Prasanth.K