Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

Siva
செவ்வாய், 25 ஜூன் 2024 (11:29 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து ராகுல் காந்தி மற்றும் கார்கே எந்த கருத்தும் கூறவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டிய நிலையில் அதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்துள்ளார். 
 
கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்த அன்றே ராகுல் மற்றும் கார்கே என்னிடம் போன் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் என்றும் கள்ளச்சாராயத்தால் இறந்த குடும்பத்தினரின் குழந்தைகளை படிக்க வைக்கும் செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருப்பவர் ராகுல், கார்கேவை குறை சொல்வதை நிறுத்திவிட்டு இது போன்ற சம்பவம் இனிமேல் நிகழாமல் இருக்க அறிவுரை கூற வேண்டுமே தவிர அரசியல் ஆக்க கூடாது என்றும் செல்ல பெருந்தகை தெரிவித்தார். 
 
கள்ளச்சாராயம் குடித்து பெற்றோரை இழந்த குடும்பங்களின்   படிப்பு செலவை காங்கிரஸ் ஏற்கும் என்று அறிவிக்கவும் ராகுல் காந்தி தான் என்னிடம் அறிவுறுத்தி இருக்கிறார் என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

3.60 கோடி லிட்டர் தண்ணீர் திருடிய தனியார் கல்லூரி: ரூ.2 கோடி அபராதம்!

234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெல்லும்.. திமுக கூட்டணி 2026 வரை நீடிக்காது: பிரேமலதா..!

விவசாயக் கடன் தள்ளுபடி.. பென்சன் வரம்பு உயர்வு.. 25 லட்சம் வேலைவாய்ப்பு! - மகாராஷ்டிரா பாஜக வாக்குறுதிகள்!

ஐப்பசி மாத பௌர்ணமி : சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. எத்தனை நாட்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments