Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (11:00 IST)
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்த நிலையில் அவர் ஜாமீன் கேட்டு தொடர்ச்சியாக மனு தாக்கல் செய்து வருகிறார். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுக்களும்  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது. நாளைய விசாரணையிலும் சென்னை ஹைகோர்ட் கேட்ட அதே கேள்வி கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சராக இருக்கும் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காது என்று கூறப்படும் நிலையில் தமிழக அரசு செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க மறுத்துள்ளது.

செந்தில் பாலாஜியின் சகோதரர் தலைமறைவாக இருப்பதாலும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அவருக்கு உச்ச நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு  இல்லை என வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments